ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு


ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 10 Sep 2023 8:33 AM GMT (Updated: 10 Sep 2023 8:36 AM GMT)

ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்தியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசிலின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது.

1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம். 2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி. 3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும்.

'நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே' பிரேசில் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும்.

பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணிதிரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட உள்ளன' என்றார்.


Next Story