லஞ்சம் பெற்ற போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


லஞ்சம் பெற்ற போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:45 PM GMT)

பாஸ்போர்ட்டு ஆய்வு பணியின்போது லஞ்சம் பெற்ற போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு:-

பெங்களூரு மாநகர போலீசார் சார்பில் கியூ.ஆர். கோடு மூலம் புகார் அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பணியின்போது அலட்சியமாக செயல்படும் போலீசார் மற்றும் லஞ்சம் கேட்கும் போலீசார் மீதும் இந்த திட்டத்தின் மூலம் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாலிபர் ஒருவர், கியூ.ஆர்.கோடு மூலம் புகார் அளித்தார். அதில், பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தேன்.

அப்போது போலீஸ் விசாரணை பணிகளை முடித்து கொடுப்பதற்கு பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தை சேர்ந்த சிவக்குமார் என்ற போலீஸ்காரர் ஒருவர், லஞ்சம் கேட்டார். இதுதொடர்பாக போலீசிடம் நான் புகார் அளித்து இருந்தேன்' என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிவக்குமார் லஞ்சம் கேட்டு பெற்றது தெரிந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து பெங்களூரு தென்கிழக்கு மண்டல உதவி போலீஸ் கமிஷனர் சி.கே.பாபு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் போலீஸ்காரர் சிவக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story