பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரி கைது


பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரி கைது
x

பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரியை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்

பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு ரூ.45 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரியை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

சொத்து பத்திரத்தில்...

கோலார் (மாவட்டம்) தாலுகா நரசிப்புராவில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு பஞ்சாயத்து அதிகாரியாக இருப்பவர் ரவி. இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர், தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்து பத்திரத்தை திருத்தி தனது பெயரை சேர்க்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார். அந்த மனுவை ரவியிடம் அந்த வாலிபர் கொடுத்தார்.

அப்போது பத்திரத்தில் பெயர் திருத்தம் செய்வதற்கு ரவி, ரூ.45 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் லஞ்சம் கொடுக்க மனமின்றி அங்கிருந்து சென்றார். பின்னர், இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த வாலிபரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.45 ஆயிரத்தை கொடுத்து, சில அறிவுரைகளை வழங்கி அனுப்பினர்.

கைது

இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி ரவியை, அவரது வீட்டிற்கு சென்று அந்த வாலிபர் சந்தித்தார். மேலும், அவர் கேட்ட லஞ்ச பணத்தையும் அவரிடம் கொடுத்தார். ரவி அந்த பணத்தை வாங்கி கையில் வைத்திருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் ரவியை கையும், களவுமாக கைது செய்தனர். இதையடுத்து ரவியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story