ஜூன் 23-ல் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்பு


ஜூன் 23-ல் பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்பு
x

Image Courtesy : PTI 

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறவுள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.இந்த நிலையில் 14வது பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் என சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு, சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் காணொலி முறையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோ, தென் ஆப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோா் பங்கேற்பாா்கள் என கூறப்படுகிறது .13வது பிரிக்ஸ் உச்சிமாநாடு கடந்த ஆண்டு செப்டம்பர்-ல் இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .


Next Story