பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
15 ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
15 ஆவது பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்கிறார். பிரிக்ஸ் மாநாட்டில் ஆகஸ்ட் 22 முதல் 24-ந்தேதி வரை பிரதமர் பங்கேற்கிறார்.
2019ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு தலைவர்களையும் சந்திக்கிறார். தொடர்ந்து, "BRICS- Africa outreach and BRICS Plus Dialogue" என்ற சிறப்பு நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 25-ல் கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் செல்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.