திருமணமான மறுநாளே புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்
சோனுவுக்கு திருமணமான மறுநாளே அவர், மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சகோதரனே கோடாரியால் வெட்டிக்கொன்றுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு (வயது 20) சோனி என்ற பெண்ணுடன் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை 5 மணியளவில் ஷிவ் வீர் தான் வைத்திருந்த கோராடியால் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரன் சோனு அவரது மனைவி சோனியை கொடூரமாக வெட்டிக்கொன்றார்.
பின்னர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மற்றொரு சகோதரர் பஹ்லன், சோனியின் சகோதரன் சவ்ரவ், நண்பன் தீபக் என மொத்தம் 5 பேரை ஷிவ் வீர் கோராடியால் கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ளார்.
தொடர்ந்து ஷிவ் வீர் தனது மனைவி, அத்தை, தந்தை ஆகியோரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்கள் படுகாயங்களுடன் தப்பிய நிலையில் கொலையாலி ஷிவ் வீர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற ஷிவ் வீர் தானும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.