மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 18 March 2024 9:46 AM GMT (Updated: 18 March 2024 12:41 PM GMT)

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

புதுடெல்லி,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16ம் தேதி டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து கவிதாவை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story