சர்வதேச எல்லையில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்..!


சர்வதேச எல்லையில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்..!
x

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இனிப்புகளை பரிமாறி ராணுவ வீரர்கள் தீபாவளியை கொண்டாடினர்.

ஜம்மு:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை நாட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகள் ஈத் மற்றும் தீபாவளி போன்ற பல்வேறு மதப் பண்டிகைகளிலும், சுதந்திர தினங்களிலும் இனிப்புகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள சில முன்னோக்கிச் சாவடிகளில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து பிஎஸ்எப் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது,

இன்று, தீபாவளியை முன்னிட்டு, பிஎஸ்எப் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் ஜம்மு எல்லைக்கு உட்பட்ட பல்வேறு எல்லை புறக்காவல் நிலையங்களில் மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

எல்லையில் திறம்பட ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், அமைதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதில் பிஎஸ்எப் எப்போதும் முன்னணியில் உள்ளது. இத்தகைய செயல்கள் (இனிப்புப் பரிமாற்றம்) மூலம் எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஒரு அமைதியான சூழ்நிலையையும், சுமுகமான உறவுகளையும் உருவாக்க உதவுகின்றன எனக் கூறினார்.


Next Story