நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
x

Image Courtesy : PTI

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலையை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் ‘வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

முன்னதாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பும், அதற்குப் பின்னரும் இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 'வெள்ளை அறிக்கை' தாக்கல் செய்வார் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story