ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் உடலில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீசாரின் சடலம் மீட்பு!


ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் உடலில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீசாரின் சடலம் மீட்பு!
x

புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தின் வயல்வெளியில் போலீஸ் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தின் நெல் வயல்வெளியில் இருந்து போலீஸ் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதியில், இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் பரூக் அஹ்மத் மிர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் 23 ஐஆர்பி பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் மர்மமான முறையில் அப்பகுதியில் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பரூக் அஹ்மத் மீரின் உடலில் தோட்டா காயங்கள் இருந்தன.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பரூக் அகமது மிர் நேற்று மாலை தனது நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story