Normal
திருமண நிகழ்வுக்கு சென்றவர்கள் பயணித்த பஸ் கல்யாண்பூரில் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி
திருமண நிகழ்வுக்கு சென்றவர்கள் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஷனிவன் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு பஸ்சில் சென்றனர். ஃபடிக்பூர் மாவட்டம் பிண்ட்ஹி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கல்யாண்பூர் பகுதி அருகே சென்றுகொண்டிருந்த போது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story