ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் பஸ்- வீடியோ

ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் பஸ்- வீடியோ
x
தினத்தந்தி 22 July 2023 2:46 PM IST (Updated: 22 July 2023 3:17 PM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

பிஜ்னூர்

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேசம் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு 36க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பயணிகள் பஸ் சிக்கிக்கொண்டது.

உதவி கேட்டு பயணிகள் அலறி உள்ளனர். சிலர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றனர்.வெள்ளத்தில் பஸ் அடித்துச் செல்லாமல் இருக்க ஜேசிபி மூலம் பேருந்தை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு பயணிகளை காப்பாற்றினர்.

இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

1 More update

Next Story