கேரளாவில் இறைச்சிக் கடை தொழிலாளி கழுத்தறுத்து கொலை - தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது

கேரளாவில் இறைச்சிக் கடை தொழிலாளி கழுத்தறுத்து கொலை - தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது
x

கேரளாவில் இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், எர்ணாகுளத்தில் உள்ள கூத்தாட்டுக்குளம் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த வீட்டில், ராதாகிருஷ்ணனுடன் தமிழகத்தை சேர்ந்த அர்ஜூன் என்பவரும் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விசாரணை மேற்கொண்டபோது, உயிரிழந்த ராதாகிருஷ்ணனுடனுடன் தங்கியிருந்த அர்ஜூன் தலைமறைவானது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, செல்போன் எண் சிக்னலை வைத்து, தென்காசியில் பதுங்கி இருந்த அர்ஜூனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story