7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x

7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளம் உள்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் தற்போதைய உறுப்பினர்களின் இறப்பு அல்லது ராஜினாமா காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ரூபாலி (பீகார்), ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா (மேற்கு வங்காளம்), விக்கிரவாண்டி (தமிழ்நாடு), அமர்வாரா (மத்தியப் பிரதேசம்), பத்ரிநாத் மற்றும் மங்களூரு (உத்தரகாண்ட்), ஜலந்தர் மேற்கு (பஞ்சாப்), டேரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் (இமாச்சல பிரதேசம்) ஆகிய 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story
  • chat