பெரிய ஆட்டக்காரரா இருக்கலாம்...! மவுசி செய்ததை மெஸ்சி செய்ய முடியுமா? சசிதரூர் கேட்கிறார்

பெரிய ஆட்டக்காரரா இருக்கலாம்...! மவுசி செய்ததை மெஸ்சி செய்ய முடியுமா? சசிதரூர் கேட்கிறார்
x

கேரள ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அர்ஜென்டினா, பிரேசில் வீரர்களின் படங்களை பிரம்மாண்ட கட் அவுட்டாக வைத்து ஆச்சரியப்பட்டுத்தி வருகின்றனர்.

புதுடெல்லி

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலக கால்பந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

கேரள ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அர்ஜென்டினா, பிரேசில் வீரர்களின் படங்களை பிரம்மாண்ட கட் அவுட்டாக வைத்து ஆச்சரியப்பட்டுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் டுவிட்டரில் புகைபடம் ஒன்றை பகிர்ந்துள்ள நகைச்சுவையாக கூறி இருப்பதாவது:-

மெஸ்சி பெரிய ஆட்டக்காரராக இருக்கலாம. ஆனால் எங்க இந்திய பெண் மவுசி போல் இதை செய்யமுடியுமா...? என கேட்டு உள்ளார்.

Next Story