டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு


டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு
x

டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கிய இந்தியா கடந்த மாதம் அதன் உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்தியது. இதனைத்தொடர்ந்து ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டுக்கு (பி20) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் சமீபத்தில் நிறுவப்பட்ட யசோபூமியில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் நடக்கிறது.

இது 9-வது மாநாடு ஆகும். இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

"ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்துக்கான நாடாளுமன்றங்கள்" என்ற கருப்பொருளில் தொடங்கும் இந்த உச்சி மாநாட்டில் ஜி-20 உறுப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மட்டுமின்றி, சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் ஜி-20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க ஒன்றியமும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறது.

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தூதரக உறவில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்த மாநாட்டை கனடா சபாநாயகர் ரேமண்ட் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story