பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி: 'வாள்' கொண்டு மக்களை மிரட்டிய வேட்பாளர்...!


பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி: வாள் கொண்டு மக்களை மிரட்டிய வேட்பாளர்...!
x

கிராம பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளரின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிபெற்று வந்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் பதூர் தாலுகாவில் காம்ஹிட் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்து தலைவராக பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். பாபுலாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினார்.

அதேபோல், பாபுலாலில் சகோதரன் சுரேஷும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்புகளை வகித்து வந்தார்.

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில், பாபுலானின் மனைவி தோல்வியடைந்தார். அதேபோல், சுரேஷும் தோல்வியடைந்தார்.

சுரேஷின் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக காம்ஹிட் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பில் இருந்து வந்தனர். ஆனால், தற்போது நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் தன் வீட்டில் இருந்த கூர்மையான வாளை எடுத்துக்கொண்டு காம்ஹிட் கிராமத்தில் உள்ள மக்களை மிரட்டினார்.

தேர்தலில் வாக்களிக்காததால் ஆத்திரமடைந்த அவர் கிராம மக்களை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிக்கொண்டு தெருக்களில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




Next Story