நடுரோட்டில் தீ பற்றி எரிந்த கார் - ஓடி சென்று உதவிய முதல்-மந்திரி
நடுரோட்டில் கார் தீப்பற்றி எந்த நிலையில் அப்போது அவ்வழியாக வந்த முதல்-மந்திரி உதவினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 12 மணியளவில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்றுகொண்டிருந்தார். அவரது காரை பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர்ந்து வந்தன.
நள்ளிரவு இரவு 12.30 மணியளவில் விலி பார்லி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதை கண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு, அதிகாரிகளுடன் சாலையின் மறுபக்கம் ஓடி சென்றார். அங்கு தீ பற்றி எரிந்த காரிரை ஓட்டிவந்த நபர் காரில் இருந்து இறங்கி தீயை அணைக்க முற்பட்டார். அப்போது, அவரை தீ பற்றி எரியும் காரில் இருந்து விலகி நிற்கும் படி கூறிய முதல்-மந்திரி காயம் ஏதாவதுபட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்து அந்த நபருக்கு உதவி செய்தார்.
பின்னர், அந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை முதல்-மந்திரி கேட்டார். அப்போது, காரை ஓட்டி வந்த நபர் தன் பெயர் விக்ராந்த் என்றார். பின்னர், அந்த நபரிடம் தேவையான உதவிகளை செய்யதாக கூறிய முதல்-மந்திரி, தீயணைப்பு துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.