லாரி மீது கார் மோதல்; கல்லூரி விரிவுரையாளர் சாவு


லாரி மீது கார் மோதல்; கல்லூரி விரிவுரையாளர் சாவு
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:15+05:30)

ஒன்னாவர் அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்தார்.

மங்களூரு:-

உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவரை சேர்ந்தவர் ஆனந்தேஷ் ராவ் (வயது 40). இவர் உடுப்பியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீபிரியா. இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும் வேலையின் காரணமாக தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தேஷ் ராவ், உடுப்பியில் இருந்து ஒன்னாவரில் உள்ள சோதேமூலா மடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரில் இவர் மட்டும் இருந்தார். ஒன்னாவர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்நிலையில் மோதிய வேகத்தில், அனந்தேஷ் ராவ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஒன்னாவர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒன்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story