நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

'நீட்' தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னையை சேர்ந்த திரிஷா மகாலட்சுமி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story