வழிபாட்டுத் தளங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


வழிபாட்டுத் தளங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x

வழிபாட்டுத் தளங்கள் சட்டத்துக்கு எதிரான பொதுநல மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

வழிபாட்டுத் தளங்கள் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உள்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் அளித்த மனுவில், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மத வழிபாட்டுத் தளங்களை மீட்பதை இந்த சட்டம் தடுப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே வழிபாட்டுத் தளங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட், வழிபாட்டுத் தளங்கள் சட்டத்திற்கு எதிரான பொதுநல மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


Next Story