80 வயது மூதாட்டி மீது பதிவான கிரிமினல் வழக்கு ரத்து


80 வயது மூதாட்டி மீது பதிவான கிரிமினல் வழக்கு ரத்து
x

மூதாட்டி மீதான வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு

தாவணகெரேயை சேர்ந்தவர் முகமது சமீர். இவருக்கும், சித்ரதுர்காவை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முகமதுவை, ஜாஸ்மின் பிரிந்தார். இந்த நிலையில் முகமது, அவரது 80 வயது பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தாவணகெரே டவுன் போலீசில் ஜாஸ்மின் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் முகமது, 80 வயது மூதாட்டி, முகமது குடும்ப உறுப்பினர்கள் மீது போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர்.


மேலும் தாவணகெரே கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தங்கள் மீது பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய கோரி முகமது கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி நாகபிரசன்னா, படுத்த படுக்கையாக இருக்கும் 80 வயது மூதாட்டி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி முகமது, மூதாட்டி, அவரது குடும்பத்தினர் மீது பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story