சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்ட கொடுத்த பெற்றோர்கள் மீது வழக்கு
சிக்கமகளூரு மாவட்டத்தில் சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்ட கொடுத்த பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடூர் மற்றும் பீரூர் டவுன் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 சிறுவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது ெதரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
மேலும் சிறுவர்களுக்கு ஏன் மோட்டார் சைக்கிள் கொடுக்கிறீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார், சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்த அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.