ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
லக்னோ,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரான லல்லன் குமார் என்பவருடைய தொலைபேசிக்கு கடந்த மார்ச் 25-ந்தேதி அழைப்பு ஒன்று வந்து உள்ளது.
அதனை எடுத்து பேசியபோது, ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து அந்த நபர் பேசியுள்ளார். இதுதவிர, தனது பெயர் மனோஜ் ராய் என்றும் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி லல்லன் குமார், லக்னோ நகரில் உள்ள சின்ஹத் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் மனோஜ் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது என இன்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story