இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் கரும்பு தோட்டத்திற்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பால்யா மாவட்டம் பன்ஷ்டிஹா கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் இயற்கை உபாதையை கழிக்க கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த அதேகிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞன் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அருகே உள்ள கரும்புத்தோட்டத்திற்கு தூக்கி சென்றுள்ளான்.

கரும்புத்தோட்டத்தில் வைத்து இளம்பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோவாகவாக எடுத்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த 20-ம் தேதி நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


Next Story