பெண்ணின் கன்னத்தில் அறைந்த விவகாரம்: மந்திரி சோமண்ணா மீது போலீசில் புகார்
பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் மந்திரி சோமண்ணா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவரிடம் ஒரு பெண், தனது குறைகளை சொல்ல முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பெண், மந்திரி சோமண்ணா மீது விழ முயன்றதாக தெரிகிறது.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த மந்திரி சோமண்ணா, அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இந்த விவகாரம் குறித்து குண்டலுபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் மந்திரி சோமண்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story