மாமனாரை தாக்கிய பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்
டெல்லியில் மாமனாரை பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.
புதுடெல்லி
டெல்லி டிபன்ஸ் காலனி காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும் அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை கண்டு ஆத்திரமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் மாமனாரை சரமாரியாக தாக்கினார். இதை அங்கிருந்த இன்னொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலானதால், பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது வேண்டுமென்றே தாக்கி காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story