சுயேச்சை வேட்பாளர் கணவர் மீது வழக்குப்பதிவு


சுயேச்சை வேட்பாளர் கணவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி சோதனை தொடர்பாக சுயேச்சை வேட்பாளரின் கணவரான கே.ஜி.எப். பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு:-

சோதனை நிறைவு

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கே.ஜி.எப். பாபு. காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர், பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு இருந்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, கே.ஜி.எப். பாபுவின் மனைவி சுயேச்சை வேட்பாளராக சிக்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது வேட்பு மனுவில் ரூ.1,600 கோடி சொத்து மதிப்புகளை குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ஐகிரவுண்டில் உள்ள கே.ஜி.எப். பாபுவின் வீட்டின் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை முடித்துவிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

வாக்காளர் அடையாள அட்டைகள்

அப்போது அவரது வீட்டில் சிக்கிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு சேலைகளை 26 பைகளில் வைத்து அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதுபோல், ரூ.1,105-க்கான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காசோலைகள், 1,925 வாக்காளர் அடையாள அட்டை

களையும், தேர்தலுக்கான பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருந்தனர். நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர் அடையாள அட்டைகள், அவரது வீட்டில் சிக்கயதால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக கே.ஜி.எப். பாபு மீது ஐகிரவுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 9 மாதங்களில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட 2-வது வருமான வரி சோதனை இதுவாகும்.


Next Story