கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவதூறு பேச்சு: மந்திரி முனிரத்னா மீது வழக்குப்பதிவு


கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவதூறு பேச்சு: மந்திரி முனிரத்னா மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவதூறு பேச்சு குறித்து மந்திரி முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் தோட்டக்கலைத்துறை மந்திரியாக இருந்து வருபவர் முனிரத்னா. இவர், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கிறிஸ்தவ சமுதாயம் குறித்து அவதூறாக பேசி இருந்தார். அதாவது குடிசை பகுதியில் வசிக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு சிலர் மாற்றி வருகின்றனர். இங்குள்ள குடிசையில் வசித்த 400 பேரை மதம் மாற்றி உள்ளனர். இனிமேல் அவர்கள் வந்தால் அடித்து விரட்டுங்கள் என்று பேசி இருந்தார். மந்திரி முனிரத்னா பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையடுத்து, மந்திரி முனிரத்னா மக்களிடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக பேசி இருப்பதாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியான மனோஜ்குமார், ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் மந்திரி முனிரத்னா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story