உத்தரகாண்டில் கோவிலுக்குள் நுழைந்த தலித் வாலிபருக்கு கொள்ளிக்கட்டையால் சூடு...!
உத்தரகாண்டில் கோவிலுக்குள் நுழைந்த தலித் வாலிபருக்கு கொள்ளிக்கட்டையால் சூடு வைத்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சால்ரா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது தலித் வாலிபர் ஆயுஷ். இவர் தங்கள் கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றார்.
அவர் கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்து ஆத்திரமடைந்த சிலர் அந்த வாலிபரை அடித்து உதைத்து, ஒரு தூணில் கட்டிவைத்தனர். பின்னர் இரவு முழுவதும் அவர் உடலில் கொள்ளிக்கட்டையால் சூடு வைத்து அந்தக் கும்பல் கொடுமைப்படுத்தினர்.
மறுநாள் காலை, அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்ற அந்த வாலிபர், பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், கிராமத்தினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவிலுக்குள் நுழைந்த தலித் வாலிபருக்கு கொள்ளிக்கட்டையால் சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.