டெல்லியில் 18-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்


டெல்லியில் 18-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்
x

கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 92-வது கூட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதாக ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா தெரிவித்து உள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

ஒழுங்காற்றுக்குழுவின் 91-வது கூட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. அப்போது முதல் தற்போது வரை மழைப்பொழிவு இருந்து வருவதால் தண்ணீர் திறப்பு பற்றி பெரிய அளவில் விவாதம் இல்லை. அதிகாரிகளின் பரிந்துரைப்படி உரிய தண்ணீர் திறக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் 92-வது கூட்டம் நடைபெற இருக்கிறது.


Next Story