பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சிபிஐ சோதனை
பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணிகட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர்கள் பலரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
பாட்னா,
பீகாரில் கடந்த 2004 முதல் 2009 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரெயில்வே துறை மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்து வகித்தார். அப்போது பணியாளர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பிகாரில் ரயில்வே வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கு, நில மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமான ஆர்ஜேடி நிர்வாகிகள் 3 பேர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாட்னாவில் உள்ள ஆர்ஜேடி முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் வீடு மற்றும் நில மோசடி தொடர்பாக ஆர்ஜேடி தலைவர்கள் சுனில் சிங், அஷ்பாக் கரீம் மற்றும் ஃபயாஸ் அகமது ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் சட்டப்பேரவையில் இன்று நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சிபிஐ சோதனை நடைபெற்று வருவது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.