சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்!


சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்!
x
தினத்தந்தி 29 Jun 2022 2:19 PM GMT (Updated: 29 Jun 2022 2:22 PM GMT)

இதற்கான மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 15ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் பயிலும் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ வாரிய 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை 15ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை பொறுத்தமட்டில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2021-2022ம் கல்வி ஆண்டில், பாடங்கள் குறைக்கப்பட்டு இரு பருவத் தேர்வுகளாக நடத்தப்பட்டது. ஐஎஸ்சிஇ வாரியமும் அந்த முறையையே பின்பற்றி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்தியது.

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் மே 24ஆம் தேதியும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதியும் முடிவடைந்தன. 10ஆம் வகுப்பு ஐஎஸ்சிஇ தேர்வுகள் மே 20ஆம் தேதியும், 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஜூன் 13ஆம் தேதியும் முடிவடைந்தன.

இந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ வாரிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வழக்கமான அட்டவணையில் இருந்து தாமதமாகவே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story