சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு...!


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு...!
x

கோப்புப்படம்

2023ம் ஆண்டு சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

2022-2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் (10, 12ஆம் வகுப்பு) எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் நிலவிவந்தது.

இந்நிலையில், தேர்வுகள் தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பானது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.

அதேபோல் இதேபோல், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது.

தேர்வுகளானது காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் தொடர்பான தேதிகளை cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story