தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி.டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என கவர்னர் கூறுவது தவறானது.சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற கவர்னருக்கு உரிமை இல்லை.
மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு கவர்னர் திருப்பி அனுப்பியது சரியல்ல.
கவர்னரின் செயலை மத்திய அரசு கண்கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்கட்டவே கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கினோம் என்றார்.
Related Tags :
Next Story