காற்று மாசை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி


காற்று மாசை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி
x

காற்று மாசை குறைக்க வலியுறுத்தும் நோக்கில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.


வாரணாசி,


உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஆளும் பா.ஜ.க.வின் இளைஞரணி சார்பில் சைக்கிள் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோன்று, மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவும் சைக்கிள் பேரணியில் இன்று கலந்து கொண்டார். அவர் பா.ஜ.க. தொண்டர்களுடன் இணைந்து சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.

இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, பா.ஜ.க. இளைஞரணி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிவகை செய்கிறது.

இந்த தகவல் மக்களை சென்றடைய வேண்டும் என நாங்கள் விரும்பினோம். சைக்கிளில் பயணம் செய்வது உடல்நலம் மேம்படவும் வழிவகுக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story