தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு


தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
x

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உளவு துறையினர் அளித்துள்ள தகவல் படி அவருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நாடு முழுவதும் ராஜீவ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ராஜீவ் குமாருக்கு ‛இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருடைய பாதுகாப்பு பணியில் 40-45 பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட உள்ளனர்.

ராஜீவ் குமார் 1984 பேட்ச்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் மே 15, 2022 அன்று 25 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.

1 More update

Next Story