சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மராட்டிய அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நிலவி வருகிறது. சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டு உள்ளார். அவர்களுக்கு எதிராக சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எம்எல்ஏக்களான ரமேஷ் போர்னாரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாத், லதாபாய் சோனாவனே, பிரகாச் சர்வே உள்ளிட்ட 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், எம்எல்ஏக்களான ரமேஷ் போர்னாரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாத், லதாபாய் சோனாவனே, பிரகாச் சர்வே உள்ளிட்ட 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் உள்ள அவா்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்.
மத்திய பாதுகாப்பு முகமை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அளித்ததன் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படுதாக அவா் தொிவித்தாா்.அதன்படி, 5 சிஆா்பிஎப் கமாண்டோக்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் பாதுகாப்பு வழங்குவாா்கள் என அவா் தொிவித்தாா்.