சந்திரயான்-3 வெற்றி: வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி


சந்திரயான்-3 வெற்றி: வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 24 Aug 2023 11:08 AM IST (Updated: 24 Aug 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடி தனது பதிலில், "சந்திரயான்-3 சாதனைக்கு வாழ்த்து, பாராட்டு தெரிவித்த உலகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் விண்வெளித் திட்டம் எப்போதும் உலகளாவிய நல்வாழ்வை மேம்படுத்த முடிந்ததைச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மோடியின் பதிவுகள் வருமாறு:-

ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பெருமை மட்டுமல்ல, மனித முயற்சி மற்றும் விடாமுயற்சியின் கலங்கரை விளக்கமாகும். அறிவியல் மற்றும் விண்வெளியில் நமது முயற்சிகள் அனைவருக்கும் ஒளிமயமான நாளை வழி வகுக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி " வாழ்த்துகளுக்கும், அருமையான வார்த்தைகளுக்கு வான் டெர் லேயனுக்கு நன்றி. அனைத்து மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக இந்தியா தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும், கற்றுக் கொள்ளும் மற்றும் பகிர்ந்து கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வாழ்த்துகளுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, "உண்மையில், அறிவியலின் சக்தி மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. வாழ்த்துகளுக்கு நன்றி.' என்று தெரிவித்துள்ளார்,

மடகாஸ்கர் அதிபருக்கு அளித்துள்ள பதிலில், "உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு உண்மையிலேயே பயனளிக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடாக இது இந்தியாவை உருவெடுத்துள்ளது, நிலவின் தென்பகுதியைத் தொட்ட முதல் நாடாக இந்தியா சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.


Next Story