நிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்


நிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்
x
தினத்தந்தி 2 Sep 2023 8:44 AM GMT (Updated: 2 Sep 2023 8:47 AM GMT)

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவில் சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் பயணத்தை நிறைவு செய்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. மேலும் பயணத்தை தொடர்கிறது என்று இஸ்ரோ டுவீட் செய்துள்ளது.

நிலவில் பள்ளங்களை கடந்து ரோவர் பாதுகாப்பாக வளைந்து செல்லும் பாதையையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


Next Story