இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் சந்திரயான்-3 மணல் சிற்பம்..!


இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் சந்திரயான்-3 மணல் சிற்பம்..!
x
தினத்தந்தி 14 July 2023 10:57 AM GMT (Updated: 14 July 2023 11:06 AM GMT)

இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் சந்திரயான்-3 மணல் சிற்பத்தை உருவாக்கி மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார்.

பூரி,

சந்திரயான்-3 விண்வெளிப் பயணத்தை முன்னிட்டு ஒடிசாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் பிரம்மாண்டமான சந்திரயான்-3 மணல் சிற்பத்தை உருவாக்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் "விஜயீ பவ" (வெற்றி பெறுங்கள்) என்ற செய்தியுடன் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்தி சந்திரயான்-3 விண்கலத்தின் 22 அடி நீள மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 இன்று மதியம் 2.35 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது சந்திரயான்-3 புவி சுற்றுவட்டப்பாதையில் 179 கீ.மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


Next Story