மன்மோகன்சிங் ஆட்சியில் சந்திரயான் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது-முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பேட்டி


மன்மோகன்சிங் ஆட்சியில் சந்திரயான் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது-முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மன்மோகன்சிங் ஆட்சியில் சந்திரயான் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று முன்னாள் மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இனி ஆவது காங்கிரசார் பாடம் கற்க வேண்டும். சந்திரயானுக்கு இணையான பணியை உலகில் வேறு எந்த நாடும் செய்யவில்லை. இஸ்ரோவின் சாதனையால் எங்களுக்கு பெருமை அளிக்கிறது. சந்திரயான்-3 வெற்றி பெற ஒட்டுமொத்த மனித சமூகத்தின் ஆதரவு இருந்தது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, சந்திரயான் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் விஞ்ஞானிகளுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டது. கேரளாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயரை காங்கிரசார் எப்படி நடத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story