ரூ.120 கோடிக்கு மேல் பணமோசடி: தடை செய்யப்பட்ட பிஎப்ஐ உறுப்பினர்கள் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!


ரூ.120 கோடிக்கு மேல் பணமோசடி: தடை செய்யப்பட்ட பிஎப்ஐ உறுப்பினர்கள் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
x

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள் 3 பேர் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) உறுப்பினர்கள் 3 பேர் மீது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றப்பத்திரிகையில் பர்வேஸ் அகமது, முகமது இலியாஸ் மற்றும் அப்துல் முகீத் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ரூ.120 கோடி ரூபாய் பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில் செப்டம்பர் 22ஆம் தேதி இந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அமலாக்கத்துறை இயக்குனரகம் தாக்கல் இந்த ஆவணம் நவம்பர் 21ஆம் தேதி சிறப்பு நீதிபதி ஷைலேந்தர் மாலிக் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story