சத்தீஸ்கர் என்கவுண்டரில் 4 முதல் 6 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தகவல்


சத்தீஸ்கர் என்கவுண்டரில் 4 முதல் 6 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தகவல்
x

கோப்புப்படம்

சத்தீஸ்கர் என்கவுண்டரில் 4 முதல் 6 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியவில்லை. ஏனெனில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற அந்த இடத்தில் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், குறைந்தது நான்கு முதல் ஆறு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்கள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்தாகுபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் பார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சூழலில் அந்தப்பகுதியில் தற்போது தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story