சத்தீஷ்கரில் 5 நக்சலைட்டுகள் கைது
சத்தீஷ்கரில் 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுக்மா,
சத்தீஷ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா நகரில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 நக்சலைட்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்தியது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல் சுக்மா மாவட்டத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் சிக்கினர்.
Related Tags :
Next Story