கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா டெல்லி பயணம்


கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா டெல்லி பயணம்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:28 AM GMT (Updated: 9 Oct 2023 7:26 AM GMT)

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். மத்திய மந்திரிகளையும் சந்தித்து அவர் பேச முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

சித்தராமையா டெல்லி பயணம்

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி சித்தராமையா நேற்று இரவு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன், மந்திரி பைரதி சுரேசும் உடன் சென்றார்.மத்தியபிரதேசம், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதுகுறித்து தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்க உள்ளார்.

கூட்டணி குறித்து ஆலோசனை

அதே நேரத்தில் டெல்லி சென்றுள்ள முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக மாநிலத்தில் செயல்

படுத்தி வரும் 4 இலவச திட்டங்கள், சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்திருப்பது, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் சித்தராமையா ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு சில மத்திய மந்திரிகளை சந்தித்து, கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பேச முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. டெல்லி பயணத்தை முடித்து விட்டு இன்று இரவே முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவுக்கு திரும்ப உள்ளார்.


Next Story