முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் நாளை கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்


முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் நாளை கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்
x

நாளை கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் தனி பெரும்பான்மையோடு காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், புதிய முதல் மந்திரியாக சித்தராமையா நேற்று பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், நாளை கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பேரவை தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். பேரவையின் புதிய தலைவர், கூட்டத்தொடரின் போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story