புத்த துறவி போல மாறுவேடத்தில் டெல்லியில் வசித்து வந்த சீன பெண் கைது


புத்த துறவி போல மாறுவேடத்தில் டெல்லியில் வசித்து வந்த சீன பெண் கைது
x

புத்த துறவி போல மாறுவேடத்தில் டெல்லியில் தங்கியிருந்த சீன பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மஞ்சு கா டில்லா என்ற இடம் உள்ளது. திபெத் அகதிகள் முகாமாக இந்த இடம் உள்ளது. சுற்றுலாவுக்கும் இது பெயர் போன இடமாகும். அகதிகள் முகாமில் நேபாளத்தை சேர்ந்த துறவி என்ற அடையாளத்துடன் வசித்து வந்த சீன பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண் சீன உளவாளியாக இருக்க்லாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

போலீஸ் தரப்பில் இது பற்றி கூறப்பட்டதாவது: டோலாமா லாமா என்ற பெயருடன் புத்த மத துறவியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சீன பெண் தனது சொந்த நாடு நேபாளம் என்று சொல்லி வந்துள்ளார். அவரது அட்டையாள ஆவணங்களை பரிசோதித்த போது உண்மையான பெயர் காய் ருயோ என்பதும் சீன நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தன்னைக் கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆங்கிலம், நேபாளி, மாண்டரின் ஆகிய மொழிகள் தெரிந்திருக்கிறது" என்று தெரிவித்தனர். சந்தேகத்தின் பெயரில் அவரை கைது செய்துள்ள இந்தப் பெண்ணின் வழக்கை டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகின்றது.


Next Story