சினிமா தயாரிப்பாளர்-மனைவி மாறி மாறி புகாரால் பரபரப்பு
சினிமா தயாரிப்பாளர் மற்றும் அவரது மனைவி மாறி மாறி போலீசில் புகார் அளித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பனசங்கரி:-
பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவரது மனைவி நமீதா. சந்திரசேகர் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஆவார். சில கன்னட சினமா படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் தனது மனைவி நமீதா மீது சந்திரசேகர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவிக்கு போதைப்பொருள் வியாபாரியுடன் கள்ளத்தொடர்பு உள்ளதாகவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும், தான் கண்டித்தாலும், எனக்கு தெரியாமல் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக கூறிருந்தார். அந்த புகாரின் பேரில் நமீதா மீது சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது.
இதற்கிடையில், தனது கணவர் சந்திரசேகர் மீது நமீதா அதே போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில், சந்திரசேகருக்கு முதலில் திருமணம் ஆனதை மறைத்து, என்னை திருமணம் செய்திருந்தார். இதுபற்றி கேட்டதால் லட்சுமேசுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பதாக போலீசில் புகார் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். லட்சுமேஷ் நண்பர்களை நிர்வாணப்படுத்தி வீடியோவும் எடுத்தும் மிரட்டி வந்தார் என்று கூறி இருந்தார். நமீதா அளித்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீசார் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.