குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அறிக்கை அடுத்த ஆண்டு தயார் - மத்திய மந்திரி தகவல்


குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அறிக்கை அடுத்த ஆண்டு தயார் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2023 5:04 AM GMT (Updated: 27 Nov 2023 7:37 AM GMT)

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

கொல்கத்தா,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகி 2014 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

இதனால், குடியுரிமை திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதும் சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அறிக்கை அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என்று மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி, குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக வேகமெடுத்துள்ளது. சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை தயாராகிவிடும். பின்னர் உடனடியாக சட்டம் அமலுக்கு வரும்' என்றார்.


Next Story